மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை தேவை - மு.க.ஸ்டாலின் கோரிக்கை


மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை தேவை -  மு.க.ஸ்டாலின்  கோரிக்கை
x
தினத்தந்தி 19 Dec 2021 6:45 PM IST (Updated: 19 Dec 2021 6:45 PM IST)
t-max-icont-min-icon

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 55 மீனவர்களை விடுவிக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

சென்னை,

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக நெடுந்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் 43 பேர் சிறைபிடிக்கப்பட்ட நிலையில், இன்று தமிழகத்தை சேர்ந்த மேலும் 12 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து 2 படகுகளும் பறிமுதல் செய்துள்ளது. இதுவரை மொத்தம் 55 தமிழக மீனவர்களை கைது செய்துள்ள இலங்கை கடற்படை 12 விசைப்படகுகளை பறிமுதல் செய்துள்ளது.

தமிழக மீனவர்வகளை இலங்கை கடற்படை கைதை தொடர்ந்து, தமிழக அரசியல் கட்சி  தலைவர்கள் பலர் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். இலங்கை கடற்படையை கண்டித்தும், கைது செய்த மீனவர்களை விடுவிக்க கோரியும் மீனவர்கள் கிராமங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில்,  மீனவர்கள், 8 படகுகளை விடுவிக்க இலங்கை அரசிடம் வலியுறுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரை போனில் தொடர்பு கொண்டு முதல-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார். மீனவர்களை விடுவிக்க உடனடி நடவடிக்கை எடுப்பதாக மத்திய மந்திரி ஜெய்சங்கர் உறுதி அளித்தாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Next Story