தமிழக அரசின் நிதி நிலை சரியானதும் அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் - மு.க.ஸ்டாலின்


தமிழக அரசின் நிதி நிலை சரியானதும் அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் - மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 19 Dec 2021 7:15 PM IST (Updated: 19 Dec 2021 7:15 PM IST)
t-max-icont-min-icon

செய் அல்லது செத்து மடி என்பார்கள், அதனை செய்து முடித்துவிட்டு தான் சாக வேண்டும் என்ற எண்ணத்திலேயே நான் கடமையாற்றி வருகிறேன் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை,

சென்னை மாதவரத்தில் அரசு ஊழியர்கள் சங்கத்தின் 14-வது மாநில மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது:-

திமுக ஆட்சி அமைத்த போதெல்லாம் அரசு ஊழியர்களுக்கு துணையாக நிற்கும். ஆட்சிக்கு வந்த 6 மாதங்களில் அரசு ஊழியர்களுக்காக ஏரளமான திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம். அரசு பணியாளர்கள், பதவி உயர்வு பெறும் அரசு ஊழியர்கள் அந்தந்த மாவட்டங்களில் பயிற்சி பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு படிப்படியாக நிச்சயமாக செயல்படுத்தும். கடும் நிதி நெருக்கடி இருந்தபோதிலும் அகலவிலைப்படி உயர்வை அமல்படுத்தியுள்ளோம். ஜனவரி 1ஆம் தேதி முதல் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும். அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட போது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்யப்படும்.

நான் உங்களில் ஒருவனாக இருப்பேன். நீங்கள் அரசு ஊழியர்கள், நான் மக்கள் ஊழியன், அவ்வளவு தான் உங்களுக்கும் எனக்கும் வித்தியாசம். நான் அதிகம் பேசமாட்டேன், செயலில் காட்டுவேன். செய்து முடித்துவிட்டு தான் சாக வேண்டும் என்ற எண்ணத்திலேயே கடமையாற்றி வருகிறேன்.

ஆங்கிலத்தில் ஒரு பழமொழி இருக்கிறது. do or die, என்னை பொறுத்தளவில் அதை do and die என்று எடுத்துக்கொள்வேன். செய்துவிட்டு செத்துமடி என்று சொல்வேன். அரசு ஊழியர்களின் குடும்பத்திற்கு கருணை நிதி வழங்கியவர் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி தான். 

அரசு ஊழியர்கள் இன்றி அரசாங்கமே இல்லை. அரசு ஊழியர்களுக்கு அதிக சலுகைகளை வழங்கியது திமுக அரசு தான். 

ஜி.எஸ்.டி. முதல் வெள்ள நிவாரண நிதிவரை மத்திய அரசு சரியாக வழங்குவதில்லை என்றும் கொத்தடிமைகளை போல் மத்திய அரசிடம் கையேந்தும் நிலையில் மாநில அரசு உள்ளது. எனவே, தமிழக அரசின் நிதி நிலை சரியானதும் அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story