போராட்டத்தில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்ட தொழிலாளர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்


போராட்டத்தில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்ட தொழிலாளர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்
x
தினத்தந்தி 20 Dec 2021 2:58 AM IST (Updated: 20 Dec 2021 2:58 AM IST)
t-max-icont-min-icon

போராட்டத்தில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்ட தொழிலாளர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்.

சென்னை,

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர், அருகே உள்ள பாக்ஸ்கான் என்ற செல்போன் உதிரிபாகம் தயாரிப்பு நிறுவன பெண் தொழிலாளர்கள் தங்கியுள்ள விடுதியில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து, ஒரகடம் பகுதியில் தொழிலாளர்கள் சாலை மறியல் செய்துள்ளனர்.

அப்போது, போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களை செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தலைமையிலான போலீசார் கண்மூடித்தனமாக தாக்கி இழுத்துச் சென்றுள்ளனர். இதை தட்டிக்கேட்ட இ.முத்துக்குமார், பகத்சிங்தாஸ் உள்ளிட்ட சி.ஐ.டி.யு. நிர்வாகிகளையும் போலீசார் தாக்கி உள்ளனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்ற காவலில் காஞ்சீபுரம் கிளைச்சிறையில் அடைத்துள்ளனர். எனவே, செங்கல்பட்டு போலீஸ் சூப்பிரண்டு மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வலியுறுத்துகிறது.

மேலும், கைது செய்யப்பட்ட தொழிலாளர்களை உடனடியாக விடுதலை செய்வதுடன், அவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளையும் திரும்பப்பெற வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story