அரசு பள்ளி மாணவர்களுக்கு ரெயின் கோட் வழங்க பள்ளிக்கல்வித்துறை திட்டம்


அரசு பள்ளி மாணவர்களுக்கு ரெயின் கோட் வழங்க பள்ளிக்கல்வித்துறை திட்டம்
x
தினத்தந்தி 20 Dec 2021 10:01 AM IST (Updated: 20 Dec 2021 10:01 AM IST)
t-max-icont-min-icon

பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாணவ மாணவிகளுக்கு ரெயின் கோட் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை காலம் நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் தமிழகம் முழுவதும் தீவிரம் காட்டிய மழை இந்த மாதம் சற்று தணிந்து உள்ளது.இருப்பினும் அவ்வப்போது  மழை பெய்து வருவதும், மழையால் பள்ளி மாணவர்கள் அதிகமாக  பாதிக்கப்பட்டு உடல் நிலை சரியில்லாமல் போவதும் வழக்கமான ஒன்றாகி விட்டது. இதன் காரணமாக நவம்பர் - டிசம்பர் மாதங்களில் பல நாட்கள்  மாணவர்கள் பள்ளி செல்ல முடியாத சூழ்நிலை இருக்கின்றது.

இதை கருத்தில் கொண்டு தமிழக பள்ளிக்கல்வித்துறை தற்போது அரசு பள்ளி  மாணவர்களுக்கு ரெயின் கோட் மற்றும் பூட்ஸ் வழங்க முடிவுசெய்துள்ளது.குறிப்பாக அதிகமாக மழை பெய்யும், மலை பிரதேச மாவட்டங்களில் மாணவ, மாணவிகளுக்கு பாதிப்பு அதிகமாக இருப்பதாக தெரிகிறது. இதை தவிர்க்க பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாணவ, மாணவிகளுக்கு ரெயின் கோட் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

தமிழக பள்ளிக்கல்வித்துறை இந்த திட்டத்தை அறிமுகம் செய்யப்படும் பட்சத்தில்  பொது மக்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில்  இது நல்ல  வரவேற்பை  பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story