கல்வி உதவித் தொகையில் முறைகேடு: 52 கல்லூரி முதல்வர்களுக்கு லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன்..!
எஸ்.டி. மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகையில் முறைகேடு செய்த விவகாரம் தொடர்பாக, 52 கல்லூரி முதல்வர்கள் விசாரணைக்கு நேரில் ஆஜராக லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன் அனுப்பி உள்ளது.
சென்னை,
கடந்த 2011 - 2014 ஆம் ஆண்டு வரை எஸ்.சி., எஸ்.டி. உள்ளிட்ட பட்டியலின மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையில் 52 கல்லூரிகளில் சுமார் 17 கோடியே 36 லட்சம் ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாக தணிக்கைத் துறை அறிக்கை அளித்திருந்தது. இதனையடுத்து 17 கோடியே 36 லட்சம் ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்திருந்தது.
இந்நிலையில் எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகையில் முறைகேடு தொடர்பான வழக்கில், பாலிடெக்னிக், கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட 52 கல்லூரிகளின் முதல்வர்களுக்கு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
இதனையடுத்து 52 கல்லூரி முதல்வர்களையும் நாளை முதல் நேரில் விசாரணைக்கு ஆஜராக லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன் அனுப்பி உள்ளது.
Related Tags :
Next Story