வேலூர் நகைக்கடையில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் மீட்பு..!


வேலூர் நகைக்கடையில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் மீட்பு..!
x
தினத்தந்தி 20 Dec 2021 2:32 PM IST (Updated: 20 Dec 2021 2:32 PM IST)
t-max-icont-min-icon

வேலூர் நகைக்கடையில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் மீட்கப்பட்டுள்ளது.

வேலூர்,

வேலூர்-காட்பாடி செல்லும் சாலையில் தோட்டப்பாளையம் தர்மராஜா கோவில் அருகே பிரபலமான நகைக்கடை உள்ளது. கடந்த 15-ந் தேதி இந்த கடையின் பின்புறத்தில் சுவரில் துளையிட்டு மர்மநபர்கள் உள்ளே புகுந்து நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர். 15 கிலோ தங்க நகைகள், அரை கிலோ வைரநகைகள் கொள்ளைபோனது. அவற்றின் மதிப்பு ரூ.7 கோடி ஆகும். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இதுகுறித்து போலீசார், கடையில் வேலைபார்க்கும் ஊழியர்கள், பாதுகாவலர்கள், எலக்ட்ரீஷியன் உள்ளிட்ட அனைவரிடமும் விசாரணை மேற்கொண்டனர்.  கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவில் முகமூடி அணிந்த ஒரு நபர் நகைகளை கொள்ளையடிக்கும் காட்சிகள் பதிவாகியிருந்தன.

கொள்ளை சம்பவம் தொடர்பாக 4 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இந்த சூழலில் டீக்கா ராமன் என்பவர் கைது செய்யப்பட்டார். தனிப்படை போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். 

இந்த நிலையில் கொள்ளையடிக்கப்பட்ட 15 கிலோ தங்க நகைகள் மற்றும் 500 கிராம் வைர நகைகள் அவரிடமிருந்து மீட்கப்பட்டுள்ளது. மேலும் கைது செய்யப்பட்ட டீக்கா ராமன் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.

Next Story