மருத்துவ படிப்புக்கான பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் நேரடியாக பெறப்படுகிறது
மருத்துவ படிப்பில் சேருவதற்கான பூர்த்தி செய்த விண்ணப்பங்களை நேரடியாக பெறுவதற்கான ஏற்பாடுகளை மருத்துவ கல்வி இயக்ககம் செய்துள்ளது.
சென்னை,
தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவ படிப்புகளில் மாணவர்கள் சேருவதற்கு நேற்று முன்தினம் (19-ந்தேதி) முதல் ஆன்லைனில் விண்ணப்பப்பதிவு தொடங்கி உள்ளது. ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 2022 ஜனவரி, 7-ந்தேதி மாலை 5 மணி வரை என வரையறுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு ஆன்லைனில் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து, அதனை தேர்வுக்குழு செயலாளர், எண்.162, பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை-600010 என்ற முகவரிக்கு ஜனவரி 10-ந்தேதி மாலை 5 மணிக்குள் தபால் மூலமாகவோ, கூரியர் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ வந்து சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நேரடியாக சமர்ப்பித்தல்
அதன்படி, நேரடியாக வந்து விண்ணப்பங்களை சமர்ப்பிப்பவர்களுக்கு ஏதுவாக கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவ கல்வி இயக்ககத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதாவது, அரசு ஒதுக்கீடு மற்றும் நிர்வாக ஒதுக்கீடு விண்ணப்பங்களை தனித்தனியாக பெறும் வகையில் 2 பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.மேலும், விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வரும் மாணவர்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் அவற்றை தீர்த்து வைப்பதற்காக உதவி மேஜை போடப்பட்டு, அதில் பணியாளர் ஒருவர் அமர்த்தப்பட்டுள்ளார். இந்த நிலையில், நேற்று காலை முதலே மருத்துவ படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் மருத்துவ கல்வி இயக்ககத்துக்கு நேரில் வருகை தந்து பூர்த்தி செய்த தங்கள் விண்ணப்பங்களை இந்த பெட்டிகளில் போட்டு வருகின்றனர். வருகிற ஜனவரி மாதம் 10-ந்தேதி மாலை 5 மணி வரை இந்த பெட்டிகள் அங்கு வைக்கப்பட்டு இருக்கும். மருத்துவபடிப்பு படிக்க விரும்பும் மாணவர்கள் இதனை பயன்படுத்திக்கொள்ளலாம்.
உதவி எண்கள்
மேலும், விண்ணப்பப்பதிவு தொடர்பான கூடுதல் விவரங்கள் மற்றும் சந்தேகங்களுக்கு 044-29862046, 29862045 என்ற தொலைபேசி எண்கள் மற்றும் 9884224648, 9884224649, 9884224745, 9884224746 என்ற செல்போன் எண்களையும் தொடர்பு கொள்ளலாம்.

Related Tags :
Next Story