கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்மொழியின் வளர்ச்சிக்காக மத்திய அரசு எடுத்த நடவடிக்கை என்ன? தயாநிதிமாறன் கேள்வி


கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்மொழியின் வளர்ச்சிக்காக மத்திய அரசு எடுத்த நடவடிக்கை என்ன? தயாநிதிமாறன் கேள்வி
x
தினத்தந்தி 21 Dec 2021 2:46 AM IST (Updated: 21 Dec 2021 2:46 AM IST)
t-max-icont-min-icon

கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்மொழியின் வளர்ச்சிக்காக மத்திய அரசு எடுத்த நடவடிக்கை என்ன? தயாநிதிமாறன் கேள்வி.

சென்னை,

மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் செம்மொழியான தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக மத்திய கல்வித்துறை அமைச்சகம் எடுத்துள்ள நடவடிக்கைகள் என்னென்ன என்று எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பினார்.

மேலும் அந்த எழுத்துப்பூர்வமான கேள்வியில் அவர் கூறியிருப்பதாவது:-

கடந்த 3 ஆண்டுகளில் செம்மொழியான தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் என்னென்ன?. 5 ஆண்டுகளில் இதற்காக செலவிடப்பட்ட தொகை எவ்வளவு? வழங்கப்பட்ட மானியங்கள், பிற மொழிகளின் வளர்ச்சிக்காக ஒதுக்கப்பட்ட தொகை எவ்வளவு?.

இவ்வாறு அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

Next Story