தட்டிக்கேட்ட போலீசார்... கை விரலை கடித்த வழக்கறிஞர்...!


தட்டிக்கேட்ட போலீசார்... கை விரலை கடித்த வழக்கறிஞர்...!
x
தினத்தந்தி 21 Dec 2021 6:44 AM IST (Updated: 21 Dec 2021 6:44 AM IST)
t-max-icont-min-icon

தட்டிக்கேட்ட போலீசாரை தாக்கிய சுரேஷ்குமார் என்ற வழக்கறிஞர் கைது செய்யப்பட்டார்.

சென்னை,

சென்னையில் தட்டிக்கேட்ட போலீசாரை தாக்கிய சுரேஷ்குமார் என்ற வழக்கறிஞர் கைதுசெய்யப்பட்டார்.

தண்டயார்பேட்டையில் உள்ள பேக்கரி ஒன்றில் ஒரு நபர் தகராறு செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் தலைமை காவலர் மாயக்கண்ணன் மற்றும் லோகநாதன் இருவரும்  சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

தகராறு செய்த நபரிடம் போலீசார்  விசாரித்ததில் அவர்  வழக்கறிஞர் சுரேஷ்குமார் என தெரியவந்துள்ளது. வழக்கறிஞர் சுரேஷ்குமார்  தகாத வார்த்தைகளால் போலீசாரை திட்டி, தாக்கியதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, வழக்கறிஞர் சுரேஷ்குமாரை போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர்.

இதை தொடர்ந்து அவர் கொடுங்கையூர் காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார் . அங்கு இருந்த  காவலர் பாபுவின் கை விரல்களை கடித்துள்ளார். பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். 

Next Story