புதுச்சேரியில் தேசிய அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டி நாக் அவுட் சுற்றுக்கு தமிழக வீராங்கனைகள் தகுதி
தேசிய அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டியில் புதுச்சேரியில் நேற்று நடந்த ஆட்டத்தில் தமிழக வீராங்கனை வெற்றி பெற்றார்.
புதுச்சேரி
தேசிய அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டியில் புதுச்சேரியில் நடந்த ஆட்டத்தில் தமிழக வீராங்கனை வெற்றி பெற்றார்.
டேபிள் டென்னிஸ்
அகில இந்திய டேபிள் டென்னிஸ் கழகம் மற்றும் புதுவை மாநில டேபிள் டென்னிஸ் கழகம் சார்பில் தேசிய அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டிகள் உப்பளம் ராஜீவ்காந்தி உள்விளையாட்டு அரங்கத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. இந்த போட்டிகள் 12 பிரிவுகளாக நடைபெற்று வருகிறது. நேற்று 2-வது நாளாக லீக் போட்டிகள் நடைபெற்றன.
தமிழக வீராங்கனைகள் வெற்றி
பெண்களுக்கான ஆட்டத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த சுருதி ராம்குமாரும், டெல்லியை சேர்ந்த லத்திகாவும் மோதினர். இதில் சுருதி ராம்குமார் 4-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். சண்டிகர் அணியை சேர்ந்த வித்யா நரசிம்மன் தன்னை எதிர்த்து விளையாடிய ரெயில்வே அணியை சேர்ந்த கவுசானி நாத்தை 4-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார். தமிழ்நாடு அணியை சேர்ந்த வேதலட்சுமி தேவியும், பாரத் பெட்ரோலியம் அணியை சேர்ந்த மதுரிகாவும் மோதினர். இதில் வேதலட்சுமி 4-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
மற்றொரு ஆட்டத்தில் குஜராத் வீராங்கனை சில்பா, இந்திய ரிசர்வ் வங்கி அணி வீராங்கனை ஹர்சவதனி 4-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
ஆண்கள்
ஆண்கள் பிரிவில் மராட்டியத்தை சேர்ந்த மந்தரும், தெலுங்கானாவை சேர்ந்த அலி முகமதுவும் விளையாடினர். இதில் மந்தர் 5-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
எல்.ஐ.சி. அணி வீரர் சுகத சர்கார், கேரள வீரர் சோகம் பட்டாச்சாரியாவை 4-3 சென்ற செட் கணக்கிலும், டெல்லி வீரர் சுதன்சு மராட்டிய வீரர் சுபம் அம்ரியை 4-2 என்ற செட் கணக்கிலும் வீழ்த்தினர். இதில் வெற்றி பெற்றவர்கள் நாக் அவுட் போட்டிகளில் கலந்துகொள்ள தகுதி பெற்றுள்ளனர். இன்று (புதன்கிழமை) முதல் நாக்-அவுட் போட்டிகள் நடைபெறும். இந்த போட்டிகளில் வெற்றி பெறும் வீரர், வீராங்கனைகள் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.
Related Tags :
Next Story