குளித்தலையில் நகைக்கடையின் பின்புற சுவரில் துளையிட்டு திருட முயற்சி


குளித்தலையில் நகைக்கடை மற்றும் செருப்பு கடையின் பின்புற சுவற்றில் துளையிடப்பட்டுள்ள காட்சி.
x
குளித்தலையில் நகைக்கடை மற்றும் செருப்பு கடையின் பின்புற சுவற்றில் துளையிடப்பட்டுள்ள காட்சி.
தினத்தந்தி 22 Dec 2021 12:14 AM IST (Updated: 22 Dec 2021 12:14 AM IST)
t-max-icont-min-icon

குளித்தலையில் நகைக்கடையின் பின்புற சுவரில் துளையிட்டு திருட முயன்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

குளித்தலை, 
மசூதிக்கு சொந்தமான கட்டிடம்
கரூர் மாவட்டம் குளித்தலை பஸ் நிலையம் அருகே பெரிய மசூதி உள்ளது. இந்த மசூதிக்கு சொந்தமான கட்டிடம் குளித்தலை பேராளம்மன் கோவில் தெருவில் உள்ளது. இங்கு டீக்கடை, செருப்பு, நகை, மளிகை உள்ளிட்ட பல்வேறு கடைகள் உள்ளன. இந்த கடைகளின் பின்புற சுவர் அந்த மசூதியின் வளாகத்தின் பின்பகுதியில் அமைந்துள்ளது.
நேற்று காலை மசூதிக்கு தொழுகை நடத்துவதற்காக வந்த சிலர் சுவற்றில் துளையிட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த குளித்தலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் துளையிட்ட பகுதிகளை பார்வையிட்டனர்.
நகைக்கடையில் திருட முயற்சி
விசாரணையில் மசூதி வழியாக நேற்று முன்தினம் இரவு நுழைந்த மர்ம ஆசாமிகள் நகைக்கடையின் பின்புற சுவற்றில் துளையிட்டு திருட முயன்றனர். ஆனால் அவர்கள் துளையிடும் போது தவறுதலாக செருப்பு கடையின் பின்புற சுவற்றை துளையிட்டிருக்கலாம் என்றும் அது செருப்பு கடை என்று தெரிந்த பின்னர் மீண்டும் நகைக்கடையின் பின்புற சுவற்றில் துளையிட்டிருக்கலாம் எனக்கூறப்படுகிறது. ஆனால் இவர்கள் துளையிட்ட பகுதி இரண்டு கடைகளின் தரையின் அடித்தள பகுதி என்பதால் கடைகளில் நுழைந்து திருட முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் மர்ம ஆசாமிகள் அங்கிருந்து தப்பி ஓடியிருக்கலாம் என கூறப்படுகிறது.
வலைவீச்சு
குளித்தலை பேராளம்மன் கோவில் தெருவில் உள்ள கடைகளின் சுவரை துளையிட்டு திருட்டு முயற்சி நடைபெற்ற சம்பவம் அப்பகுதி வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த  சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகள் குறித்து குளித்தலை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அவர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Next Story