தேசிய இளைஞர் விழா குறித்து கவர்னர் தமிழிசை முதல்வர் ரங்கசாமி ஆலோசனை
தேசிய இளைஞர் விழா குறித்து கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆகியோர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.
புதுச்சேரி
தேசிய இளைஞர் விழா குறித்து கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆகியோர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.
ஆலோசனை கூட்டம்
தேசிய இளைஞர் விழா ஜனவரி மாதம் 12-ந் தேதி தொடங்கி 16-ந் தேதி வரை புதுச்சேரியில் நடைபெற உள்ளது. இந்த விழாவை பிரதமர் நரேந்திரமோடி தொடங்கி வைக்க வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்தநிலையில் இ்ந்த விழாவிற்கான ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் தலைமை செயலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் முதல்-அமைச்சர் ரங்கசாமி, அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமி நாராயணன், தேனீ.ஜெயக்குமார், சந்திர பிரியங்கா, புதுவை தொழில்நுட்ப பல்கலைக் கழக துணைவேந்தர் மோகன், போலீஸ் ஏ.டி.ஜி.பி. ஆனந்தமோகன் மற்றும் அரசு செயலாளர்கள், அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
நிதி ஒதுக்கீடு
கூட்டத்தில் கல்வித்துறை இயக்குனர் ருத்ரகவுடு விழா ஏற்பாடுகள் குறித்து விரிவாக எடுத்துக்கூறினார். பங்கேற் பாளர்கள், அதிகாரிகள் மற்றும் தன்னார்வலர்களுக்கான தங்குமிடம், உணவு, சுத்தமான குடிநீர், போக்குவரத்து, மருத்துவ வசதிகள், நிதி ஒதுக்கீடு ஆகியவை குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் அரசுத்துறைகள், அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள், தன்னார்வ அமைப்புகளை ஈடுபடுத்துதல், நிர்வாக குழுக்கள் அமைத்தல், தன்னார்வலர்கள் மற்றும் நெறியாளர்களை நியமித்தல், கொரோனா கட்டுப்பாடுகளுடன் விழா ஏற்பாடுகளை மேற்கொள்ளுதல் ஆகியவை குறித்து கவர்னர் தமிழிசை சவுந்தர ராஜன் ஆலோசனை கூறினார்.
Related Tags :
Next Story