கிறிஸ்துமஸ் பண்டிகை; மதுரை ஐகோர்ட்டுக்கு 24-ந் தேதி முதல் 2-ந் தேதி வரை விடுமுறை


கிறிஸ்துமஸ் பண்டிகை; மதுரை ஐகோர்ட்டுக்கு 24-ந் தேதி முதல் 2-ந் தேதி வரை விடுமுறை
x
தினத்தந்தி 22 Dec 2021 3:12 AM IST (Updated: 22 Dec 2021 3:12 AM IST)
t-max-icont-min-icon

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி மதுரை ஐகோர்ட்டுக்கு 24-ந் தேதி முதல் 2-ந் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை,

நாடு முழுவதும் வருகிற 25-ந்தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி மதுரை ஐகோர்ட்டில் வருகிற 24-ந்தேதி முதல் ஜனவரி மாதம் 2-ந்தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை கால கோர்ட்டுகளில் (அதாவது வருகிற 29-ந்தேதி மட்டும்) பணியாற்றும் நீதிபதிகள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. 

அதன் விவரம் வருமாறு:--

நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், ஸ்ரீமதி ஆகியோர் அனைத்து டிவிஷன் பெஞ்ச் வழக்குகளையும் விசாரிக்கின்றனர்.

டிவிஷன் பெஞ்ச் விசாரணை முடிந்த பின்பு தனி அமர்வில் நீதிபதி சி.வி.கார்த்திகேயன், அனைத்து ரிட் மனுக்களையும் விசாரிக்கிறார். நீதிபதி ஸ்ரீமதி, மேல்முறையீட்டு மனுக்களை விசாரிக்கிறார்.

நீதிபதி ஆனந்தி, அனைத்து கிரிமினல் மனுக்களையும் விசாரிக்கிறார். வக்கீல்கள் தங்களின் வழக்குகள் சம்பந்தப்பட்ட ஆவணங்கள் அனைத்தையும் உரிய இ-மெயில் முகவரிக்கு அனுப்பும்படி ஐகோர்ட்டு பதிவாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story