60 நாட்களுக்கு பின் மீண்டும் தொடங்கிய ஊட்டி மலை ரெயில் சேவை..!!
மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு 60 நாட்களுக்கு பின் மீண்டும் மலை ரெயில் சேவை தொடங்கியது.
உதகை,
வடகிழக்கு பருவமழையின் காரணமாக அண்மையில் பெய்த கனமழையால் தமிழகத்தில் பல பகுதிகளில் சாலைகள், வீடுகள் என மழைநீர் சூழ்ந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. கனமழை காரணமாக கல்லாறு-அடர்லி ரெயில் நிலையங்களுக்கு இடையில் மண் சரிவு ஏற்பட்டு பாறைகள் உருண்டு மலை ரெயில் பாதையில் விழுந்தன.
தண்டவாளங்கள் சேதமடைந்ததால், மலை ரெயில் சேவை நிறுத்தப்பட்டிருந்தது. சரிசெய்யும் பணி தொடர்ந்து நடைபெற்றதால் மேட்டுப்பாளையம் - உதகை சிறப்பு ரெயில் சேவை 21-ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், கல்லார் - அடர்லி இடையேயான ரெயில் வழித்தடத்தில் சீரமைப்பு பணிகள் முழுமையாக நிறைவுற்றதால் இன்று முதல் மீண்டும் மேட்டுப்பாளையம் - உதகை சிறப்பு ரெயில் சேவை தொடங்கி உள்ளது. இது சுற்றுலாப் பயணிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story