திடீரென அதிர்ந்த வீடுகள்... அலறியடித்து வெளியே ஓடி வந்த மக்கள்...


திடீரென அதிர்ந்த வீடுகள்... அலறியடித்து வெளியே ஓடி வந்த மக்கள்...
x
தினத்தந்தி 22 Dec 2021 1:20 PM IST (Updated: 22 Dec 2021 1:20 PM IST)
t-max-icont-min-icon

வேலூர் பேரணாம்பட்டு பகுதியில் 3வது முறையாக லேசான நில அதிர்வு உணரப்பட்டது. இது தொடர்பாக வருவாய்த் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலூர்,

வேலூர் மாவட்டத்தின் சில பகுதிகளில் கடந்த சில தினங்களுக்குள் இரண்டு முறை நில அதிர்வுகள் ஏற்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. லேசான நில அதிர்வுகள் என்பதால் பெரிய அளவில் உயிரிழப்பு போன்ற எதுவும் ஏற்படவில்லை.

இந்நிலையில் தற்போது வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியில் மீண்டும் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. 3-வது முறையாக நில அதிர்வு தொடர்பாக வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அதேபோல கர்நாடக மாநிலம் சிக்கப்பள்ளாப்பூர் மாவட்டத்திலும் 3.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கும் உணரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story