நெல்லை வந்தவருக்கு ஒமைக்ரான் பரிசோதனை - சோதனை வளையத்தில் 78 பேர்
தான்சானியா நாட்டில் இருந்து திருநெல்வேலி வந்த நபருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
நெல்லை,
கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான தான்சானியா நாட்டில் இருந்து சென்னை வழியாக திருநெல்வேலிக்கு ஒருவர் வந்துள்ளார். இந்நிலையில் அந்த நபருக்கு காய்ச்சல் உள்ளிட்ட உபாதைகள் ஏற்பட்டதையடுத்து திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
இந்த பரிசோதனையின் முடிவில் அந்த நபருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானதால், தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆப்பிரிக்க நாட்டில் இருந்து வந்திருப்பதால், அந்த நபருக்கு ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை கண்டறிவதற்கான சோதனை நடந்து வருகிறது.
இந்த பரிசோதனை முடிவுகள் வெளியான பிறகே சம்பந்தப்பட்ட நபருக்கு ஒமைக்ரான் தொற்று ஏற்பட்டுள்ளதா என்பதை உறுதியாக கூற முடியும் எனவும், தற்போது அவருக்கு லேசான அறிகுறிகளுடன் கூடிய கொரோனா பாதிப்பு மட்டுமே உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதே சமயம் அவருடன் தொடர்பில் இருந்த 78 பேர் கண்டறியப்பட்டு அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story