டாஸ்மாக் பார்களுக்கான புதிய டெண்டர் - தடை விதிக்க சென்னை ஐகோர்ட்டு மறுப்பு
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் பார்களுக்கான புதிய டெண்டர் அறிவிப்புக்கு தடை விதிக்க சென்னை ஐகோர்ட்டு மறுப்பு தெரிவித்துள்ளது.
சென்னை,
தமிழகம் முழுவதும், டாஸ்மாக் மதுக்கடைகளின் இணைப்பில் உள்ள பார்களில், தின்பண்டங்கள் விற்பனை மற்றும் காலி பாட்டில்களை சேகரிப்பதற்காக புது டெண்டர் அறிவிப்பை டாஸ்மாக் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இந்த டெண்டர் நிபந்தனைகளில், பார்கள் அமைப்பதற்கான நிலத்தின் உரிமையாளர்களிடம் தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும் என்பது உள்ளிட்ட பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் புதிய டெண்டர் அறிவிப்பை எதிர்த்து, பார் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், டெண்டர் இறுதி செய்யப்பட்ட பின்பு, நிலத்தின் உரிமையாளர்களிடம் தடையில்லாச் சான்றிதழ் பெற்றால் போதும் என தெரிவித்தார். இதையடுத்து, டெண்டருக்கு இடைக்காலத் தடை விதிக்க மறுத்த நீதிபதி, அனைவருக்கும் டெண்டர் விண்ணப்பங்களை வழங்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
Related Tags :
Next Story