கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக சசிகலாவின் உறவினர் விவேக்கிடம் விசாரணை
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக சசிகலாவின் உறவினர் விவேக்கிடம் தனிப்படை போலீசார், கோவையில் 3 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
கோவை,
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலா ஆகியோருக்கு சொந்தமான எஸ்டேட், நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கோடநாட்டில் உள்ளது. இந்த எஸ்டேட்டில் உள்ள பங்களாவில், கடந்த 24-4-2017 அன்று கொள்ளை சம்பவம் நடந்தது. அப்போது சில பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன. இந்த சம்பவத்தின்போது அங்கு காவலாளியாக இருந்த ஓம்பகதூர் என்பவர் கொலை செய்யப்பட்டார். கொள்ளையர்கள் தாக்கியதில், மற்றொரு காவலாளியான கிருஷ்ணதாபா படுகாயம் அடைந்தார்.
இது தொடர்பாக கோத்தகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து 9 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை நீலகிரி மாவட்ட கோர்ட்டில் நடந்து வருகிறது.
5 தனிப்படைகள்
இதற்கிடையில் கோடநாடு வழக்கில் கூடுதலாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் மறுவிசாரணை நடத்தி வருகிறார்கள். வழக்கு குறித்து முழு விசாரணை நடத்த 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
வழக்கில் தொடர்புடையவர்களின் மரணம் அடுத்தடுத்து நடந்ததால், கோடநாடு சம்பவத்துக்கும், இதற்கும் தொடர்பு எதுவும் உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனால் இந்த வழக்கு விசாரணை சூடுபிடித்தது.
மேலும் 2 பேர் கைது
தொடர் விசாரணை அடிப்படையில் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தடயங்களை அழித்ததாக கனகராஜின் அண்ணன் தனபால், நெருங்கிய உறவினர் ரமேஷ் ஆகிய 2 பேரை கடந்த அக்டோபர் 25-ந் தேதி போலீசார் கைது செய்தனர்.
மேலும் புதிதாக கிடைக்கும் தகவல்களை கொண்டு வழக்கில் தொடர்புடைய நபர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை 80-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டு உள்ளது.
சசிகலாவின் உறவினரிடம் விசாரணை
இந்தநிலையில் கோடநாடு சம்பவம் தொடர்பாக சசிகலாவின் அண்ணன் மகன் விவேக்கிடம் நேற்று தனிப்படை போலீசார் கோவை பி.ஆர்.எஸ். மைதானத்தில் விசாரணை நடத்தினர்.
3 மணி நேரம் நடைபெற்ற இந்த விசாரணையில் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக தெரிந்த தகவல்களை கூறுமாறு போலீஸ் அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.
கோடநாடு எஸ்டேட் மற்றும் நிர்வாகம் தொடர்பாகவும் தனிப்படையினர் கேட்டனர். இதில் சில விவரங்களை அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்த வழக்கை பொறுத்தவரை விவேக்கிடம் மீண்டும் ஒருசில நாட்களில் விசாரணை நடத்தப்படலாம் என்று கூறப்படுகிறது.
பரபரப்பு
இதுவரை பலரிடம் விசாரணை நடத்திய போலீசார், இந்த வழக்கில் சசிகலாவின் குடும்பத்தினரிடம் விசாரணையை தொடங்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோடநாடு சம்பவம் நடைபெற்றபோது சசிகலா சிறையில் இருந்தார். இதனால் சம்பவம் குறித்து எஸ்டேட் நிர்வாகம் தரப்பில் இருந்து விவேக்கிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது என்றும், அதனாலேயே அவரிடம் விசாரணை நடத்தப்படுகிறது என்றும் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இன்று (வியாழக்கிழமை) கோடநாடு வழக்கு நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story