நாகை கலெக்டரை தொடர்ந்து சைக்கிளில் அலுவலகம் சென்ற திருவாரூர் கலெக்டர்!


நாகை கலெக்டரை தொடர்ந்து சைக்கிளில் அலுவலகம் சென்ற திருவாரூர் கலெக்டர்!
x
தினத்தந்தி 23 Dec 2021 1:03 PM IST (Updated: 23 Dec 2021 1:20 PM IST)
t-max-icont-min-icon

சுற்றுச்சூழலை பாதுகாக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, திருவாரூர் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன், சைக்கிளில் அலுவலகத்திற்கு சென்றுள்ளார்.

திருவாரூர்,

மோட்டார் சைக்கிள், கார் போன்ற வாகனங்களால் காற்று மாசடைவதை தடுக்கவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் சைக்கிள் பயன்பாடு, பஸ், ரெயில் போன்ற பொது போக்குவரத்து பயன்பாட்டை அதிகப்படுத்த வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.

சமீபத்தில்  சுற்றுச்சூழல் மற்றும் காற்று மாசு தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா  அலுவலகத்தில் இருந்து கலெக்டர் அலுவலகத்துக்கு பஸ்சில் சென்றார்.  பஸ்சுக்காக கலெக்டர் காத்திருந்ததையும், பஸ்சில் நின்று கொண்டே பயணம் செய்ததையும் பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

இந்தநிலையில், சுற்றுச்சூழலை பாதுகாக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, திருவாரூர் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன், சைக்கிளில் அலுவலகத்திற்கு சென்றுள்ளார்.   

கடந்த சில தினங்களுக்கு முன்  நாகை மாவட்ட  கலெக்டர் அருண் தம்புராஜ்  சுற்றுச்சூழல் மாசுபாட்டை தடுக்கும் பொருட்டு விழிப்புணர்வு ஏற்படுத்த தனது வீட்டில் இருந்து அலுவலகத்திற்கு சைக்கிளில் பயணம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

Next Story