கழிவுகளில் இருந்து உரம் தயாரிக்கும் பணி: தூய்மை பணியாளர்களுக்கு பயிற்சி


கழிவுகளில் இருந்து உரம் தயாரிக்கும் பணி: தூய்மை பணியாளர்களுக்கு பயிற்சி
x
தினத்தந்தி 23 Dec 2021 7:11 PM IST (Updated: 23 Dec 2021 7:11 PM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் கழிவுகளில் இருந்து உரம் தயாரிப்பது குறித்து தூய்மை பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

நெல்லை,

நெல்லை மாவட்டம் ராதாபுரம் ஊராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின்கீழ், 21.5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கழிவுகளை உரமாக்கும் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தை ஊராட்சி மன்றத் தலைவர் இன்று துவக்கி வைத்தார். 

இதைத் தொடர்ந்து கழிவுகளை தரம்பிரிப்பது மற்றும் கழிவுகளை எவ்வாறு உரமாக்குவது என்பது குறித்து தூய்மை பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த திட்டத்தின்படி குப்பையில் கொட்டப்படும் வீணான காய்கறிகள், பழங்கள் மற்றும் உணவுகளை உரமாக மாற்றி விவசாய தேவைகளுக்காக பயன்படுத்த முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Next Story