நிவாரணம் பெற முயன்ற பெண் உள்பட 3 பேர் கைது


நிவாரணம் பெற முயன்ற பெண் உள்பட 3 பேர் கைது
x
தினத்தந்தி 23 Dec 2021 11:27 PM IST (Updated: 23 Dec 2021 11:27 PM IST)
t-max-icont-min-icon

மரக்காணத்தில் போலி ஆவணம் தயாரித்து சேதமடைந்த பயிர்களுக்கு நிவாரணம் பெற முயன்ற பெண் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

மரக்காணத்தில் போலி ஆவணம் தயாரித்து சேதமடைந்த பயிர்களுக்கு நிவாரணம் பெற முயன்ற பெண் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
நிவாரணம் பெற முயற்சி
மரக்காணம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 2 மாதங்களாக கன மழை பெய்தது. இதனால் அப்பகுதியில் சாகுபடி செய்திருந்த நெல், மணிலா, மரவள்ளி கிழங்கு உள்ளிட்ட பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன. இதையடுத்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு சார்பில் நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.
இந்தநிலையில் மரக்காணம் அருகே உள்ள எம்.புதுப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த மஞ்சுளா (வயது 45), தண்டபாணி (63), முருகன் (50), அருண் (32), அய்யனார் (48) ஆகியோர்  எம்.திருக்கனூர் கிராம நிர்வாக அலுவலரின் முத்திரை மற்றும் கையெழுத்தை போலியாக பயன்படுத்தி போலி ஆவணம் தயாரித்து சேதமடைந்த பயிர்களுக்கு நிவாரணம் பெற வேளாண் துறை அதிகாரிகளிடம் விண்ணப்பித்தனர்.
பெண் உள்பட 3 பேர் கைது
விண்ணப்பத்தின் மீது சந்தேகம் ஏற்பட்டதை தொடர்ந்து, வேளாண் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட எம்.திருக்கனூர் கிராம நிர்வாக அலுவலரை வரவழைத்து சரிபார்த்தனர். அப்போது போலி ஆவணம் தயாரித்து நிவாரணம் பெற முயன்றது தெரியவந்தது.
இதுகுறித்து எம்.திருக்கனூர் கிராம நிர்வாக அலுவலர் பிரபு மரக்காணம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மஞ்சுளா, தண்டபாணி, அய்யனார் ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் அருண், முருகன் ஆகிய 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story