தூத்துக்குடியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேருக்கு கொரோனா - மலேசியாவில் இருந்து வந்தவர்கள்


தூத்துக்குடியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேருக்கு கொரோனா - மலேசியாவில் இருந்து வந்தவர்கள்
x
தினத்தந்தி 24 Dec 2021 4:29 PM IST (Updated: 24 Dec 2021 4:29 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே மலேசியாவில் இருந்து வந்த குடும்பத்தினர் உள்பட 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி,

மலேசியாவில் இருந்து வந்த கணவன், மனைவி மற்றும் 7 வயது சிறுமி ஆகிய மூவரும், விநாயகர் நகர் பகுதியில் உள்ள அவர்களின் பெற்றோர் வீட்டில் தங்கியுள்ளனர். இதில் வெளிநாட்டில் இருந்து வந்தவர்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டதால் அவர்களது குடும்பத்தினர் 9 பேருக்கும் பரிசோதனை செய்யப்பட்டது. 

அதில், 7 வயது சிறுமியைத் தவிர மீதி 8 பேருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மீதி 6 பேர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் அப்பகுதியில் உள்ள 33 பேருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், அப்பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கபட்டுள்ளது. 

கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட 8 பேரின் பரிசோதனை முடிவுகள் தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், ஒமைக்ரான் பரிசோதனை செய்யப்படும் என்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Next Story