கோவை: ஆபாச புகைப்படம் அனுப்ப வற்புறுத்தும் ஆசிரியர்- மாணவிகள் போராட்டம்


கோவை: ஆபாச புகைப்படம் அனுப்ப வற்புறுத்தும் ஆசிரியர்-  மாணவிகள் போராட்டம்
x
தினத்தந்தி 24 Dec 2021 5:10 PM IST (Updated: 24 Dec 2021 5:10 PM IST)
t-max-icont-min-icon

கோவையில் ஆபாச புகைப்படம் அனுப்பும்படி வற்புறுத்துவதாக ஆசிரியர் மீது மாணவ, மாணவிகள் புகார் கூறி உள்ளனர்.

கோவை,

கோவை வெள்ளலூர் அரசு பள்ளி கணினி ஆசிரியருக்கு எதிராக மாணவ, மாணவிகள் இன்று காலை முதலே ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். ஆன்லைன் வகுப்பின்போது ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், ஆபாச புகைப்படம் அனுப்பும்படி வற்புறுத்துவதாகவும் ஆசிரியர் மீது மாணவ, மாணவிகள் புகார் கூறி உள்ளனர். 

ஆசிரியரின் செல்போன் வாயிலாக அனுப்பப்பட்ட குறுஞ்செய்தியை ஆதாரமாக வைத்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என மாணவர்களும், பெற்றோர்களும் வலியுறுத்துகின்றனர்.

மாணவர்களிடம் பள்ளி நிர்வாகமும், போலீசாரும் பேச்சுவார்த்தை நடத்திவருகின்றனர். பள்ளி நிர்வாகம் ஆசிரியர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்போவதாக கூறி உள்ளது. பாதிக்கப்பட்ட மாணவிகள் காவல்துறையில் புகார் அளித்தால்  கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிகிறது.

Next Story