சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வில் முறைகேடு என புகார் - தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கடிதம்


சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வில் முறைகேடு என புகார் - தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கடிதம்
x
தினத்தந்தி 24 Dec 2021 6:22 PM IST (Updated: 24 Dec 2021 6:22 PM IST)
t-max-icont-min-icon

சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வுகளில் சில பள்ளிகள் முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்துள்ளன.

சென்னை,

சி.பி.எஸ்.இ. 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நவம்பர் 30 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 11 ஆம் தேதி வரை நடைபெற்றது. அதே போல் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் டிசம்பர் 1 ஆம் தேதி தொடங்கி 22 ஆம் தேதி வரை நடைபெற்றது. இம்முறை சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வு 2 கட்டங்களாக நடத்தப்படுகிறது.

விடையை மட்டும் குறிக்கும் வகையிலான முதல் கட்ட தேர்வு டிசம்பர் மாதத்திலும், விரிவான விடை அளிக்கும் வகையிலான 2 ஆம் கட்ட தேர்வு மார்ச் மாதத்திலும் நடைபெறும் எனவும் புதிய தேர்வு நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் விடைத்தாள்களை அந்தந்த பள்ளி நிர்வாகங்களே மதிப்பீடு செய்யவும் சி.பி.எஸ்.இ. அனுமதி அளித்துள்ளது. 

இந்த நிலையில் சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வுகளில் சில பள்ளிகள் முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்தன. கேள்விகளை பள்ளி நிர்வாகங்கள் கசிய விட்டதாகவும், பொதுத்தேர்வின் போது ஆசிரியர்கள் மாணவர்களுக்கு விடையளித்து உதவியதாகவும் கரூரை தலைமையிடமாக கொண்ட சி.பி.எஸ்.இ. பள்ளிகள் நிர்வாக சங்கம் புகார் அளித்துள்ளது.  

இதனால் நடந்து முடிந்த சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி சி.பி.எஸ்.இ. பள்ளிகள் நிர்வாக சங்கம் சார்பில் சி.பி.எஸ்.இ. அமைப்புக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. பள்ளியை சாராத ஒரே ஒரு நபர் மட்டுமே கண்காணிப்பாளராக நியமிக்கப்படுவதால் எளிதில் குளறுபடிகள் நடைபெறுவதாகவும், இதனால் பல சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் சுமார் 20 மாணவர்கள் வரை முழு மதிப்பெண்களை பெறுவதோடு, பள்ளியிலும் 100% தேர்ச்சி காட்டப்படுவதாகவும் அந்த கடிதத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Next Story