சமூக இடைவெளியை கடைபிடித்து விழாக்களை கொண்டாட வேண்டும் கவர்னர் தமிழிசை வேண்டுகோள்
சமூக இடைவெளியை கடைபிடித்து விழாக்களை கொண்டாட வேண்டும் என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புதுச்சேரி
சமூக இடைவெளியை கடைபிடித்து விழாக்களை கொண்டாட வேண்டும் என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தடுப்பூசி முகாம்
கொரோனா பரவலை தடுக்கும் விதமாக புதுவை அண்ணா சாலையில் வீடு மற்றும் கடைகள் தோறும் சென்று தடுப்பூசி செலுத்தும் முகாம் நடந்தது. முகாமில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்துகொண்டு ஆய்வு செய்தார்.
அப்போது பொதுமக்களை சந்தித்த கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ஒமைக்ரான் வேகமாக பரவி வரும் சூழ்நிலையில் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றும், முகக்கவசம் அணியவேண்டும் என்றும் வலியுறுத்தினார். நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை செயலாளர் உதயகுமார், இயக்குனர் ஸ்ரீராமுலு மற்றும் சுகாதரத்துறையினர் கலந்துகொண்டனர்.
அப்போது கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-
சமூக இடைவெளி
பண்டிகை மற்றும் விழாக்களை மகிழ்ச்சியோடு கொண்டாடும் இந்த நேரத்தில் பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். அனைவரும் முகக்கவசம் அணியவேண்டும். தடுப்பூசியை வலியுறுத்துவது மக்களின் நன்மைக்காகத்தான்.
சமூக இடைவெளியை கடைபிடித்து விழாக்களை கொண்டாட வேண்டும். புதுச்சேரிக்கு வரும் சுற்றுலா பயணிகளிடம் தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ் கேட்கப்படுகிறது. விழாக்களை கொண்டாட அரசு கொடுத்துள்ள அனுமதியை மக்கள் கவனமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
உள்கட்டமைப்பு
மேலும் கொரோனா மேலாண்மை கூட்டத்தில் கலந்துகொண்ட கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறுகையில் பண்டிகை காலங்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரிக்கும் என்பதால் அனைவரும் கொரோனா நடைமுறைகளை பின்பற்றுவதை உறுதிசெய்யவேண்டும். மாநில எல்லைகளில் அதற்கான அறிவிப்புகளை வெளியிட வேண்டும். தொற்று அதிகரித்தால் அதற்கான சிகிச்சைகளை மேற்கொள்ள பிராணவாயு, படுக்கை வசதி போன்ற உள்கட்டமைப்புகளையும், டாக்டர்களையும் தாயர் நிலையில் வைத்திருக்கவேண்டும் என்றார்.
Related Tags :
Next Story