கிறிஸ்துமஸ் பண்டிகை: தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை...


கிறிஸ்துமஸ் பண்டிகை: தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை...
x
தினத்தந்தி 25 Dec 2021 12:30 AM IST (Updated: 25 Dec 2021 12:30 AM IST)
t-max-icont-min-icon

உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை தேவாலயங்களில் களைகட்டியுள்ளது.

சென்னை,

ஏசுபிரான் அவதரித்த தினம் கிறிஸ்துமஸ் பண்டிகை டிசம்பர் 25 உலகம் எங்கும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் தினத்தன்று நள்ளிரவு முதலே கிறிஸ்தவர்கள் கொண்டாட்டங்களில் ஈடுபடுவார்கள். 

அந்த வகையில் இயேசு பிரான் அவதரித்த தினமான கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று தமிழகம் முழுவதும் உள்ள தேவாலயங்களில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. தேவாலாயங்களில் நள்ளிரவு முதலே கிறிஸ்தவர்கள் பிரார்த்தனை, ஆட்டம்-பாட்டம் கொண்டாட்டம் என களைகட்டியுள்ளன. 

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக மதவழிபாடுகளுக்கு பல்வேறு தடுப்பு நெறிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் தேவாலயங்களில் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி ஆராதனை மற்றும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.  உலகம் முழுவதும் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்று வருகிறது.

அனைத்து தேவாலயங்களிலும் முக கவசம் அணிந்தும், சமூக இடைவெளி கடைபிடித்தும் பிரார்த்தனை கூட்டம் நடந்து வருகிறது. இதனால் கிறிஸ்துமஸ் பண்டிகை உலகம் முழுவதும் எளிமையாகவே கொண்டாடப்பட்டு வருகிறது.

சென்னை, குமரி, தூத்துக்குடி, மதுரை, திருச்சி, தஞ்சை, கோவை, புதுச்சேரி, என தமிழகம் முழுவதும் உள்ள தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் பண்டிகை களைகட்டியுள்ளது.

கிறிஸ்துமஸ் பண்டிகையை யொட்டி கொட்டும் பனி மற்றும் குளிரிலும் ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடக்கிறது. இதில் பலர் குடும்பத்துடன் உற்சாகமாக பங்கேற்றனர். கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு அனைத்து தேவாலயங்களும் மின் விளக்குகளால் ஜொலிக்கிறது.

Next Story