இதுவரை 74 பேருக்கு ‘எஸ் ஜீன்’ குறைபாடு: ஒமைக்ரானால் பாதிக்கப்பட்ட 7 பேர் ‘டிஸ்சார்ஜ்’


இதுவரை 74 பேருக்கு ‘எஸ் ஜீன்’ குறைபாடு: ஒமைக்ரானால் பாதிக்கப்பட்ட 7 பேர் ‘டிஸ்சார்ஜ்’
x
தினத்தந்தி 25 Dec 2021 12:41 AM IST (Updated: 25 Dec 2021 12:41 AM IST)
t-max-icont-min-icon

இதுவரை 74 பேருக்கு ‘எஸ் ஜீன்’ குறைபாடு: ஒமைக்ரானால் பாதிக்கப்பட்ட 7 பேர் ‘டிஸ்சார்ஜ்’ டாக்டர் ராதாகிருஷ்ணன் தகவல்.

சென்னை,

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் ‘தினத்தந்தி’ நிருபரிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் இருந்து கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 139 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு இருக்கிறதா என்பதை கண்டறியும் பரிசோதனை செய்ததில், 74 பேருக்கு ‘எஸ் ஜீன்’ குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது. ஆனாலும், 139 பேரின் மாதிரிகளையும், மரபணு பகுப்பாய்வு கூடத்துக்கு அனுப்பப்பட்டது. அதில் இதுவரை 34 பேருக்கு ஒமைக்ரான் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களை அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதித்து டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதில் தற்போது வரை 7 பேர் ஒமைக்ரான் தொற்று பாதிப்பில் இருந்து பூரணமாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

மீதமுள்ளவர்கள் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story