கரூரில் புதிய வேளாண் கல்லூரி தொடங்க ரூ.10 கோடி நிதி - தமிழக அரசு அரசாணை


கரூரில் புதிய வேளாண் கல்லூரி தொடங்க ரூ.10 கோடி நிதி - தமிழக அரசு அரசாணை
x
தினத்தந்தி 25 Dec 2021 3:31 PM IST (Updated: 25 Dec 2021 3:31 PM IST)
t-max-icont-min-icon

கரூர் மாவட்டத்தில் புதிய வேளாண் கல்லூரி தொடங்குவதற்கு 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

கரூர்,

கரூர் மாவட்டத்தில் புதிய வேளாண் கல்லூரி தொடங்குவதற்காக தமிழக அரசு ரூ.10 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளது;-

“தற்போது வேளாண்மை கல்வி மற்றும் வேளாண் ஆராய்ச்சியின் தேவை அதிகரித்துள்ளது. இதனைக் கருத்தில்கொண்டு, வேளாண் நிதிநிலை அறிக்கையில் கிருஷ்ணகிரியில் புதிதாக அரசுத் தோட்டக்கலை கல்லூரி தொடங்க அறிவிக்கப்பட்டது. 

வேளாண் கல்வியின் முக்கியத்துவம் கருதி, 2021-2022 ஆண்டில் கரூர் மாவட்டம், நாகப்பட்டினம் மாவட்டத்தில் கீழ்வேளூர், சிவகங்கை மாவட்டத்தில் செட்டிநாடு ஆகிய இடங்களில் மூன்று புதிய அரசு வேளாண்மைக் கல்லூரிகள் துவங்குவதற்கு மாநில அரசு தலா ரூபாய் 10 கோடி வீதம் மொத்தம் ரூபாய் 30 கோடி நிதியினை ஒதுக்கும்” என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story