அமைச்சர் பதவி போன்ற எந்த பொறுப்பிற்கும் எனக்கு ஆசை இல்லை- உதயநிதி ஸ்டாலின் பேச்சு
உதயநிதி அமைச்சராக வேண்டும் என்பது மக்கள் விருப்பமாக உள்ளது என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்ட பலரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
சென்னை,
திமுக இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ.வுமான உதயநிதி திமுக ஆட்சி அமைந்தபோதே அமைச்சரவையில் இடம்பெறுவார் என்ற பேச்சு எழுந்தது.
எனினும், அவர் எம்.எல்.ஏ.வாகவே தொடர்கிறார். இதற்கிடையே, உதயநிதி அமைச்சராக வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், கோவை மாவட்டம் காளப்பட்டி யில் திமுக உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் இன்று 1 மணி அளவில் நடைபெற்றது. முகாமை இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் பேசுகையில், அமைச்சர், துணை முதல்-அமைச்சர் பொறுப்புகளுக்கு என்னை நியமிக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி மற்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் பேசினர் அந்த பொறுப்புகளுக்கு ஆசைப்படாதவன் நான். என்றார்.
Related Tags :
Next Story