ஓட்டுநர் திடீர் மயக்கம் - சாலையோர வீட்டின் மீது பாய்ந்த பேருந்து - ஒருவர் பலி
கடலூர் அரசுப் பேருந்து சாலை ஓரத்தில் இருந்த வீட்டின் மீது மோதிய விபத்தில் சிக்கி ஒருவர் பலியானார்.
கடலூர்,
கடலூர் மாவட்டம் சேரப்பாளையம் பகுதியில் அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த பேருந்தின் ஓட்டுநருக்கு தீடீரென மயக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரமாக இருந்த வீட்டின் மீது பாய்ந்தது. இந்த சம்பவத்தில் அந்த வீட்டின் அருகே இருந்த ஒருவர் சம்பவ இடத்திலே பரிதாபமாக பலியானார். மேலும் 10 க்கும் மேற்பட்டோர் படு காயங்களுடன் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் மயக்கமடைந்த ஓட்டுநருக்கும் அதே மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story