தமிழக அரசு பொதுமக்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும்: அர்ஜூன் சம்பத்


தமிழக அரசு பொதுமக்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும்: அர்ஜூன் சம்பத்
x
தினத்தந்தி 26 Dec 2021 4:46 PM GMT (Updated: 26 Dec 2021 4:46 PM GMT)

தமிழக அரசு பொதுமக்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் கூறினார்.

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள பாரியூர் கொண்டத்து காளியம்மன் திருவிழா குறித்து தொண்டர்களுடன் ஆலோசனை மேற்கொள்வதற்காக கோபிக்கு இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் வந்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் அரசாங்கமே மதுக்கடைகளை நடத்துகிறது, எனவே மதுக்கடைகளை மூடும் போராட்டத்தை ஒவ்வொரு ஆண்டும் இந்து மக்கள் கட்சி நடத்தி வருகிறது, மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக மூட வேண்டும். விலைவாசி உயர்வால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். தி.மு.க.வுக்கு மக்கள் நல்ல வாய்ப்பை அளித்து உள்ளனர். ஆகவே ஒரு நல்ல ஆட்சியை மக்களுக்கு தி.மு.க. கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story