14-வயது சிறுமியை பலாத்காரம் செய்த வளர்ப்பு தந்தைக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை


14-வயது சிறுமியை பலாத்காரம் செய்த வளர்ப்பு தந்தைக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை
x
தினத்தந்தி 27 Dec 2021 4:09 PM IST (Updated: 27 Dec 2021 4:09 PM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் அருகே மகள் முறையான சிறுமியை கர்ப்பமாக்கியவருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் பகுதியை சேர்ந்த 44 வயதுடையவர் மீன் பிடிக்கும் தொழிலாளி. இவர் 2-வதாக அதே பகுதியை சேர்ந்த 36 வயதுடைய பெண்ணை திருமணம் செய்தார். அந்த பெண்ணிற்கு 3-வது திருமணமாகும். இந்த நிலையில் அந்த பெண்ணின் 2-வது  கணவருக்கு பிறந்த 14 வயது சிறுமியை, தந்தை முறையிலான 44 வயதுடையவர் பாலியல் பலாத்காரம் செய்தார். இதில் சிறுமி கர்ப்பமானள். 

இது தொடர்பாக சிறுமியின் தாய் தனது கணவர் மீது அறந்தாங்கி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இந்த வழக்கு புதுக்கோட்டை மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது. 

இந்த நிலையில் இன்று மதியம் தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் மகள் முறையான சிறுமியை கர்ப்பமாக்கியவருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும் ரூ.50 ஆயிரம் அபராதமும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஏற்கனவே ரூ. 3 லட்சத்து 50 ஆயிரம் இழப்பீடு வழங்கப்பட்ட நிலையில் மேலும் ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் இழப்பீடு வழங்க அரசுக்கு உத்தரவிட்டார்.


Next Story