கைதிகளை துன்புறுத்துவதாக கூறி - திண்டுக்கல் சிறை முன் பெண் தர்ணா


கைதிகளை துன்புறுத்துவதாக கூறி - திண்டுக்கல் சிறை முன் பெண் தர்ணா
x
தினத்தந்தி 28 Dec 2021 1:55 AM IST (Updated: 28 Dec 2021 1:55 AM IST)
t-max-icont-min-icon

கைதிகளை துன்புறுத்துவதாக கூறி - திண்டுக்கல் சிறை முன் பெண் தர்ணா.

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி கீழக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் ரவிக்குமார் (வயது 47). குதிரை சவாரி பயிற்சியாளர். இவருடைய மனைவி கவிதா (37). இந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் 18-ந்தேதி அப்பகுதியை சேர்ந்த தி.மு.க. பிரமுகரை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக ரவிக்குமாரை சின்னாளபட்டி போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில் நேற்று கணவரை பார்ப்பதற்காக திண்டுக்கல் சிறைக்கு வந்த கவிதா திடீரென சிறை முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது சிறை போலீசார் எனது கணவர் உள்பட கைதிகளை அடித்து துன்புறுத்துகின்றனர்.

மேலும் உறவினர்கள் கொண்டு வரும் பொருட்களை கைதிகளுக்கு கொடுக்கவும், கைதிகளை பார்க்க அனுமதிக்கவும் போலீசார் பணம் கேட்கின்றனர் என்றார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் இந்த குற்றச்சாட்டை சிறைத்துறை அதிகாரிகள் மறுத்தனர்.

Next Story