ஒரு மாவட்டத்துக்கு ஒரு சட்டக்கல்லூரி என்பதே முதல்-அமைச்சரின் லட்சியம்: சட்டத்துறை அமைச்சர்


ஒரு மாவட்டத்துக்கு ஒரு சட்டக்கல்லூரி என்பதே முதல்-அமைச்சரின் லட்சியம்:  சட்டத்துறை அமைச்சர்
x
தினத்தந்தி 28 Dec 2021 5:26 AM IST (Updated: 28 Dec 2021 5:26 AM IST)
t-max-icont-min-icon

தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளதுபோல் மாவட்டத்துக்கு ஒரு சட்டக்கல்லூரி அமைப்பதே முதல்-அமைச்சரின் லட்சியம் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.



காரைக்குடி,

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அண்ணா தமிழ் கழகம் சார்பில், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் தலைமையில் 49ம் ஆண்டு அண்ணா விழா கொண்டாடப்பட்டது.

இதில், அண்ணா விருது வழங்கி சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசுகையில், சட்டக்கல்லூரியின் முக்கியத்துவம் உணர்ந்து தேர்தல் அறிக்கையில் மாவட்டத்துக்கு ஒரு சட்டக்கல்லூரி அமைக்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.  இதனை செயல்படுத்துவதை லட்சியமாக கொண்டுள்ளார்.  விரைவில் அதற்கான நடவடிக்கை எடுப்பார் என்று கூறினார்.


Next Story