சென்னை; இன்றைய பெட்ரோல், டீசல் விலை
சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை.
சென்னை,
சென்னையில் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக பெட்ரோல், டீசல் விலையில் எவ்வித மாற்றமும் இன்றி விற்பனை செய்யப்பட்டு வந்தது. தொடர்ந்து 54-வது நாளாக இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை.
அதன்படி, சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.101.40க்கும், டீசல் லிட்டருக்கு ரூ.91.43க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதே போல், புதுடெல்லி, மும்பை உள்ளிட்ட நாட்டின் பிற முக்கிய நகரங்களிலும் தொடர்ந்து சில வாரங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் பெரிய மாற்றங்கள் ஏதும் இல்லாமல் சீராக ஒரே விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப, எரிபொருள் விலையை தினசரி நிர்ணயிக்கும் நடைமுறைக்கு அரசு அனுமதி அளித்தது. இதன்படி, எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாற்றியமைத்து வருகின்றன. இதனால், பெட்ரோல், டீசல் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட நிலையில் கடந்த மாதத்திலிருந்து பெட்ரோல், டீசல் விலை ஒரே சீராக ஏற்றம் அடையாமல் இருப்பதால் பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story