பத்திர பதிவுக்கு வரும் ஆவணத்திற்கு தலா ரூ.10 வசூல் - பதிவுத்துறை அரசாணை


பத்திர பதிவுக்கு வரும் ஆவணத்திற்கு தலா ரூ.10 வசூல் - பதிவுத்துறை அரசாணை
x
தினத்தந்தி 28 Dec 2021 10:36 AM IST (Updated: 28 Dec 2021 10:36 AM IST)
t-max-icont-min-icon

ஆவண எழுத்தர் நல நிதியத்திற்காக, பதிவுக்கு வருபவர்களிடம் ஆவணங்களுக்கு தலா 10 ரூபாய் வீதம் வசூல் செய்யப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

ஆவண எழுத்தர் நல நிதியத்திற்கு பணம் சேர்ப்பதற்காக, பத்திர பதிவுக்கு வரும் ஒவ்வொரு ஆவணத்திற்கும் 10 ரூபாய் வசூலிக்கப்பட வேண்டும் என வணிகவரி மற்றும் பதிவுத்துறை வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த அரசாணையில், ஆவண எழுத்தர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் நலனுக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள ஆவண எழுத்தர் நல நிதியம் முழுமையான செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆவண எழுத்தர் நல நிதியத்தில், விருப்பத்தின் பேரில் உறுப்பினராக சேர நுழைவு கட்டணமாக ரூ.1,000 வசூலிக்கப்பட்ட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பத்திரப்பதிவு செய்யப்படும் ஆவணங்களுக்கு தலா 10 ரூபாய் வீதம், பதிவுக்கு வருபவர்களிடம் ஆவண எழுத்தர் நல நிதியத்திற்காக வசூல் செய்யப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது. ஆவண எழுத்தர் நல நிதிய உறுப்பினர்களுக்காக வழங்கப்படும் நல உதவிகளைப் பெறுவதற்கு தகுதிகள் மற்றும் நடைமுறைகள் உருவாக்கப்பட வேண்டும் எனவும் அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story