டிராக்டர் ஏற்றி விவசாயி கொலை! சினிமா பட பாணியில் நிகழ்ந்த கொடூரம்!


டிராக்டர் ஏற்றி விவசாயி கொலை! சினிமா பட பாணியில் நிகழ்ந்த கொடூரம்!
x
தினத்தந்தி 28 Dec 2021 12:40 PM IST (Updated: 28 Dec 2021 12:40 PM IST)
t-max-icont-min-icon

கடலூரில் நிலப் பிரச்சினையால் டிராக்டர் ஏற்றி விவசாயி கொல்லப்பட்ட கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர்,

கடலூர் மாவட்டம் சோழத்தரம் அருகே உள்ள சக்தி விளாகம் கிராமத்தை சேர்ந்தவர் ஆழ்வார் மகன் ராமதாஸ் (வயது 45), விவசாயி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பரமசிவம் மகன் ஸ்ரீதர் என்பவருக்கும் நிலப் பிரச்சினை சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில், நேற்று இரவு 10 மணியளவில் அதே பகுதியில் உள்ள காளியம்மன் கோவில் முன்பு இருந்த ராமதாசை, ஸ்ரீதர் தனது ஆதரவாளர் மகாராஜனுடன் சேர்ந்து டிராக்டர் ஏற்றி கொலை செய்தார். இது தொடர்பாக சோழத்தரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நிலப் பிரச்சினையால்  ஏற்பட்ட விரோதம் காரணமாக சினிமா பட பாணியில், டிராக்டர் ஏற்றி விவசாயி கொல்லப்பட்ட கொடூர சம்பவம் அப்பகுதியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story