மதுரை: பிறந்து ஐந்து நாட்களே ஆன பெண்குழந்தை மர்மமான முறையில் உயிரிழப்பு-போலீசார் விசாரணை
குழந்தையின் மரணத்தில் மர்மம் இருப்பதாக வி.ஏ.ஓ.அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை,
மதுரை உசிலம்பட்டியில் பிறந்த ஐந்து நாட்களே ஆன பெண்குழந்தை மர்மமான முறையில் உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முத்துப்பாண்டி - கவுசல்யா தம்பதிக்கு ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் இருக்கும் நிலையில், கடந்த 21-ந் தேதி மூன்றாவதாக ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது.
இந்த நிலையில், 26-ந் தேதி உடல் நலக்குறைவால் குழந்தை இறந்துவிட்டதாக கூறி வீட்டுக்கு பின் புதைத்தாக கூறப்படும் நிலையில், குழந்தையின் மரணத்தில் மர்மம் இருப்பதாக வி.ஏ.ஓ.அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்த போது, முத்துப்பாண்டி - கௌசல்யா தம்பதி வீட்டை பூட்டி விட்டு தப்பியோடிவிட்டதாக கூறப்படுகிறது.
முத்துப்பாண்டி கொத்தனார் வேலை பார்த்து வரும் நிலையில், ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகளுடன் இருப்பதால் மூன்றாவதாக பிறந்த குழந்தையை அவர்களே கொலை செய்திருக்கக் கூடும் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story