மீனவர்கள் வலையில் சிக்கிய 2½ டன் திமிங்கல சுறா
மீனவர்கள் வலையில் சிக்கிய 2½ டன் திமிங்கல சுறா மீன் ஒன்று சிக்கியது.
புதுச்சேரி
புதுவை வீராம்பட்டினத்தை சேர்ந்தவர் சரவணன். இவருக்கு சொந்தமான விசைப்படகில் மீனவர்கள் நேற்று முன்தினம் மாலை கடலில் மீன்பிடிக்க சென்றார்கள்.
கடலில் சுமார் 25 கி.மீ. தூரத்தில் வலைவீசி மீன்பிடித்தபோது வலையில் மிகப்பெரிய மீன் ஒன்று சிக்கியது. அதனை படகிற்கு தூக்க முடியாததால் வலையை கடலுக்குள்ளேயே இழுத்தபடி நள்ளிரவில் தேங்காய்த்திட்டு மீன்பிடி துறைமுகத்தை அவர்கள் வந்தடைந்தனர்.
பின்னர் அங்கிருந்த மீனவர்கள் உதவியுடன் அதை மேலே தூக்கியபோதுதான் அது திமிங்கல சுறா என்பதும் இறந்துபோய் இருந்ததும் தெரியவந்தது. சுமார் 15 அடி நீளத்தில் 2.5 டன் எடையுள்ளதாக அது இருந்தது.
இதுதொடர்பாக மீன்வளத்துறைக்கும், வனத்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. துறை அதிகாரிகள் விரைந்து வந்து அதனை பார்வையிட்டனர். சீனியர் போலீஸ் சூப்பிரண்டு விஷ்ணுகுமாரும் இறந்த திமிங்கல சுறாவை பார்வையிட்டார். இதன்பின் வனத்துறையினர் முன்னிலையில் அந்த திமிங்கல சுறா பரிசோதனை செய்யப்பட்டு, அந்த பகுதியிலேயே குழிதோண்டி புதைக்கப்பட்டது.
Related Tags :
Next Story