மீனவர் வலையில் சிக்கிய 33 கிலோ கூறல் மீன் ரூ.4 லட்சத்துக்கு விலை போனது


மீனவர் வலையில் சிக்கிய 33 கிலோ கூறல் மீன் ரூ.4 லட்சத்துக்கு விலை போனது
x
தினத்தந்தி 29 Dec 2021 1:21 AM IST (Updated: 29 Dec 2021 1:21 AM IST)
t-max-icont-min-icon

மீனவர் வலையில் சிக்கிய 33 கிலோ கூறல் மீன் ரூ.4 லட்சத்துக்கு விலை போனது.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் பகுதியை சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் கடலில் மீன்பிடித்து விட்டு நேற்று கரை திரும்பினர். அப்போது மீனவர் ஒருவர் வலையில் 33 கிலோ எடை கொண்ட கூறல் மீன் சிக்கியது. அந்த மீனை வியாபாரி ஒருவர் ரூ.4 லட்சம் கொடுத்து வாங்கி சென்றார். இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில், பொதுவாக கூறல் மீன்கள் அடிக்கடி வலையில் சிக்குவதில்லை. மிகவும் அரிதாக சிக்கக்கூடிய மீன். இந்த மீன் பெரும்பாலும் உணவுக்காக பயன்படுத்துவதில்லை. இந்த மீனின் வயிற்றில் நெட்டி என்ற குடல் பகுதி காணப்படும். இந்த நெட்டி மருத்துவ குணம் உடையது. இதனாலேயே இவ்வகையான மீன்கள் அதிக விலை போகிறது என்று கூறினார்கள்.

Next Story