ஆதிபராசக்தியின் அவதாரம் என்று பிரசாரம்: பெண் சாமியார் அன்னபூரணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்


ஆதிபராசக்தியின் அவதாரம் என்று பிரசாரம்: பெண் சாமியார் அன்னபூரணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
x
தினத்தந்தி 29 Dec 2021 4:23 AM IST (Updated: 29 Dec 2021 4:23 AM IST)
t-max-icont-min-icon

ஆதிபராசக்தியின் அவதாரம் என்று பொய் பிரசாரம் செய்யும் பெண் சாமியார் அன்னபூரணி மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

சென்னை,

அகில பாரத இந்து மக்கள் கட்சி சார்பில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று புகார் மனு ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது.

அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

அன்னபூரணி அரசு அம்மா என்ற யூடியூப் சேனலில் அன்னபூரணி அரசு என்ற பெண் சாமியார், தன்னை கடவுளின் அவதாரம் என்றும், ஆதிபராசக்தியின் அவதாரம் என்றும் சொல்லிக்கொள்ளும் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.தொடர்ந்து சமூகவலைதளங்களில் அன்னபூரணி கடவுளின் அவதாரம் என்ற தவறான செய்தி பரப்பப்படுகிறது.

சட்டபூர்வ நடவடிக்கை

இந்து மக்கள் மத்தியில் இதுபோன்ற தவறான பிரசாரம் செய்யப்படுகிறது. அன்னபூரணி பற்றி பொய்யாக பரப்பப்படும் இந்த செய்திக்கு தடை விதிக்க வேண்டும். அவர் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Next Story