தமிழகத்தில் மேலும் 11 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு 45 ஆக உயர்வு
தமிழகத்தில் மேலும் 11 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதிப்பு 45 ஆக உயர்ந்துள்ளது.
சென்னை,
தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் தொற்று பல்வேறு நாடுகளில் பரவியுள்ளது. இந்தியாவில் 600-க்கும் மேற்பட்டோர் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் மட்டும் 34 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் 16 பேர் குணமடைந்துவிட்ட நிலையில் 18 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்தநிலையில், நேற்று மேலும் 11 பேருக்கு ஒமைக்ரான் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிக ஆபத்தான நாடுகளில் இருந்து வந்த 4 பேரும், அதிக ஆபத்து இல்லாத நாடுகளில் இருந்து வந்த 3 பேரும், அவர்களுடன் தொடர்பில் இருந்த 4 பேர் என மொத்தம் 11 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது என மருத்துவத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இவர்களில் 6 பேர் சென்னை கிண்டியில் உள்ள கிங்ஸ் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறன்றனர்.
பாதிப்பு 45 ஆக உயர்வு
ஒருவர் தனியார் ஆஸ்பத்திரிலும், திருவாரூர், கன்னியாகுமரி, திருவண்ணாமலை ஆஸ்பத்திரிகளில் தலா ஒருவர் வீதம் 3 பேரும் சிகிச்சையில் உள்ளனர். இவர்களில் ஒருவர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளார். இதன் மூலம் தமிழகத்தில் ஒமைக்ரான் தொற்று பாதிப்பு 45 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 24 பேர் ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டுள்ளனர். 21 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர்.
இதைத்தவிர கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள 100-க்கும் மேற்பட்டோருக்கு ‘எஸ்’ ஜீன் குறைபாடு (ஒமைக்ரான் தொற்று அறிகுறி) இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர்களின் மாதிரிகள் ஒமைக்ரான் பரிசோதனைக்காக மத்திய அரசின் மரபணு ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story