“மலை கிராமங்களில் நடமாடும் ரேஷன் கடைகள்” - சட்டமன்ற பொதுக்கணக்கு குழு தலைவர் தகவல்


“மலை கிராமங்களில் நடமாடும் ரேஷன் கடைகள்”  - சட்டமன்ற பொதுக்கணக்கு குழு தலைவர் தகவல்
x
தினத்தந்தி 29 Dec 2021 9:44 AM IST (Updated: 29 Dec 2021 9:44 AM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாடு சட்டமன்ற பொதுக்கணக்கு குழுவின் ஆய்வுக்கூட்டம் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.

கோவை,

தமிழக சட்டமன்ற பொதுக்கணக்கு குழுவின் தலைவர் செல்வபெருந்தகை தலைமையில் கோவையில் தொண்டாமுத்தூர், செங்குபதி மலைவாழ் கிராமம், சோமையம்பளையம், அண்ணா பல்கலைக்கழக வளாகம், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், ஆர்.எஸ். புரம் பகுதியில் கட்டப்பட்டு வரும் பெண்கள் விடுதி, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஆகிய இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 

இதையடுத்து கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுக்கணக்கு குழுவின் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செல்வபெருந்தகை கோவை மலை கிராமம் வேளாண் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், அரசு மருத்துவமனை ஆகிய இடங்களில் ஆய்வு மேற்கொண்டதாகவும் அரசு ஊழியர்களிடம் குறையைக் கேட்டு தெரிந்து கொண்டதாகவும் கூறினார்.

மலை கிராமங்களில் வாழும் பழங்குடியின மக்கள் விலங்குகளால் தாக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்த அவர், நடமாடும் ரேஷன் கடைகள் மூலம் அவர்களின் வீடுகளுக்கே பொருள்கள் விநியோகிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். பள்ளி செல்லும் குழந்தைகள் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக உடனடியாக வழித்தடம் இல்லாத கிராமங்களுக்கு வழித்தடம் அமைக்கப்பட்டு பேருந்து சேவை தொடங்கப்படும் என்று அவர் கூறினார். 

Next Story