மாற்றுத்திறனாளிகள் நலன் காக்கும் முன்மாதிரி திட்டம் - தமிழக அரசு அரசாணை


மாற்றுத்திறனாளிகள் நலன் காக்கும் முன்மாதிரி திட்டம் - தமிழக அரசு அரசாணை
x
தினத்தந்தி 29 Dec 2021 10:05 AM IST (Updated: 29 Dec 2021 10:05 AM IST)
t-max-icont-min-icon

மாற்றுத்திறனாளிகள் நலன் காக்கும் முன்மாதிரி திட்டத்திற்கு ரூ.2.58 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதில் 2021 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டில் மாற்றுத் திறனாளிகள் நலனுக்கான பல்வேறு அம்சங்கள் அறிவிக்கப்பட்டது. குறிப்பாக, உலக வங்கியின் உதவியுடன் மாற்றுத்திறனாளிகளின் நலன் காக்கும் ‘Rights’ திட்டம் அறிவிக்கப்பட்டது.

மாற்றுத்திறனாளிகளின் நலன் காக்கும் இந்த முன்மாதிரி திட்டம் ரூ.1,702 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட உள்ளது. அதற்கு முதற்கட்டமாக ரூ.2.58 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. உலக வங்கி நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் இந்த முன்மாதிரி திட்டத்திற்கு ஆலோசகர்களை நியமிக்க தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. 

மாற்று திறனாளிகளுக்கான நோய் தடுப்பு பராமரிப்பு மற்றும் மறுவாழ்வு சேவை, தொழிற்கல்வி, தன்னிறைவு, வேலை வாய்ப்பு ஆகியவை சென்றடைவதை உறுதி செய்தல் இந்த திட்டத்தின் நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story