திருவண்ணாமலை அருகே காட்டுப்பாட்டை இழந்த கார் கால்வாயில் பாய்ந்தது


திருவண்ணாமலை அருகே காட்டுப்பாட்டை இழந்த கார் கால்வாயில் பாய்ந்தது
x
தினத்தந்தி 29 Dec 2021 3:21 PM IST (Updated: 29 Dec 2021 3:21 PM IST)
t-max-icont-min-icon

விபத்து நடந்த இடத்தில் இருந்த மின் கம்பம் சேதமடைந்த நிலையில் அதில் மின் சப்ளை இருந்துள்ளது.

திருவண்ணாமலை,

தெலுங்கான மாநிலம் ஐதராபத்தைச் சேர்ந்தவர்கள் ஒருகாரில் திருவண்ணாமலை கோயிலுக்கு சென்று விட்டு காரில் திரும்பிக் கொண்டு இருந்தனர். கார் கண்ணமங்கலம் அருகே உள்ள வண்ணாங்குளம் கிராமம் அருகே வரும் போது சாலையோரம் இருந்த பள்ளத்தில் இறங்கி கால்வாய்க்குள் பாய்ந்தது. 

விபத்து நடந்த இடத்தில் இருந்த மின் கம்பம் சேதமடைந்த நிலையில் அதில் மின் சப்ளை இருந்துள்ளது. இதைக்கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக காரில் இருந்தவர்களை மீட்டனர். இதையடுத்து மின் வாரியத்தினருக்கு கொடுத்த தகவலின் பேரில் மின் சப்ளை துண்டிக்கப்பட்டது. 

இந்த விபத்தில் காரில் வந்த ஐதராபாத் மலைப்பேட்டை தில்சந்த்நகர் கோபி(38), சரிதா(35), சரண்யா(32), சுமித்திரா(15), சிவராம்(11), தேவதா(6), டிரைவர் பிரசாத் உள்பட 7 பேர் காயமின்றி உயிர் தப்பினர். இதுகுறித்து கண்ணமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story