புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு: புதுச்சேரியில் 3 மணி நேரத்துக்கு மது விற்பனை செய்ய தடை
புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு புதுச்சேரியில் 3 மணி நேரத்துக்கு மது விற்பனை செய்ய தடை ஐகோர்ட்டு உத்தரவு.
சென்னை,
சென்னை ஐகோர்ட்டில் புதுச்சேரியை சேர்ந்த ஜெகன்நாதன் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், ‘கொரோனா வைரசால் ஏராளமான மனித உயிர்கள் பலியாகின்றன. புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட தடை விதிக்க வேண்டும்’ என்று கோரியிருந்தார்.
இதை அவசர வழக்காக நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், டி.பரத சக்கரவர்த்தி ஆகியோர் நேற்று பிற்பகலில் விசாரணைக்கு எடுத்தனர்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், ‘புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டங்களை மேற்கொள்ளலாம். ஆனால் டிசம்பர் 31-ந் தேதி (நாளை) இரவு 10 மணி முதல் ஜனவரி 1-ந் தேதி அதிகாலை 1 மணி வரை 3 மணி நேரத்துக்கு மதுபானங்கள் விற்கக்கூடாது. புதுச்சேரி அரசு உத்தரவின்படி 1 மணிக்கு மேல் மது விற்பனை செய்ய முடியாது. மதுபான விற்பனை கடைகள் மட்டுமல்லாமல், ஓட்டல்களில் உள்ள பார்களும் மதுபானங்கள் விற்பனை செய்யக்கூடாது. இந்த வழக்கை வருகிற ஜனவரி 3-ந் தேதிக்கு தள்ளிவைக்கிறோம்’ என்று உத்தரவிட்டனர்.

Related Tags :
Next Story