பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் குவிந்த அரிய வகை வாத்துகள்


பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் குவிந்த அரிய வகை வாத்துகள்
x
தினத்தந்தி 30 Dec 2021 2:45 AM IST (Updated: 30 Dec 2021 2:45 AM IST)
t-max-icont-min-icon

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் அரிய வகை வாத்துகள் குவிந்துள்ளது. இதை பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.

ஆலந்தூர்,

சென்னை வேளச்சேரி முதல் மேடவாக்கம், பெரும்பாக்கம் வரை பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதி காணப்படுகிறது. இந்த சதுப்பு நிலம் வனத்துறையினரால் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

சென்னையை அடுத்த பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் ஆண்டுந்தோறும் பல்வேறு நாடுகளில் இருந்து வரும் பறவைகள் குறித்து வனத்துறை அதிகாரிகள் தன்னார்வ அமைப்புகளுடன் கணக்கெடுக்கும் பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

இந்த ஆண்டு நடத்திய கணக்கெடுப்பில், வழக்கமாக 20 ஆயிரம் வாத்துகள் வந்து செல்லும் இப்பகுதியில் இந்த ஆண்டு 7,500 வாத்துகள் மட்டுமே வந்துள்ளதாக தெரியவந்துள்ளது. வழக்கத்தை விட 50 சதவீதக்கும் குறைவான வாத்துகளே இங்கு வந்துள்ளதை காண முடிகிறது.

வாத்துக்கள் வருகை

நடப்பாண்டில் பருவமழை நன்கு பெய்துள்ளதால் நீர்நிலைகள் நிரம்பி உள்ளன. இதனால் வாத்து இனங்களின் வருகை வெகுவாக குறைந்துள்ளதாக தெரிகிறது.

அதில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரிய வகையான நிறம் மாறிய நீள சிறகு வாத்துகள் இங்கு வந்து உள்ளன. மேலும் இந்த ஆண்டு சதுப்பு நில பகுதிக்கு 123 வகையான 32 ஆயிரம் பறவைகள் வந்துள்ளன.

சதுப்பு நிலத்தில் பல்வேறு மேம்பாட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதால் வரும் ஆண்டுகளில் அதிக அளவில் பறவைகள் வரக்கூடும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதனை அப்பகுதி மக்கள் குடும்பத்துடன் ரசித்து தங்களது செல்போனில் படம் பிடித்தனர்.

Next Story