5 பவுன் வரை நகை அடகு வைத்துள்ள 13½ லட்சம் பேருக்கு நகைக்கடன் ரத்து தமிழக அரசு தகவல்
5 பவுன் வரை நகை அடகு வைத்துள்ள 13½ லட்சம் பேருக்கு நகைக்கடன் ரத்து செய்யப்படுகிறது. யார் யாருக்கு நகைக்கடன் ரத்து செய்யப்படும் பலன் கிடைக்கும் என்ற விவரம் அறிவிக்கப் பட்டுள்ளது.
சென்னை,
5 பவுனுக்கு உட்பட்ட நகைக்கடன்கள் ரத்து செய்யப்படும் என்று தேர்தல் நேரத்தில் தி.மு.க. வாக்குறுதி அளித்தது.
தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு நகைக்கடன் தள்ளுபடிக்கான பணிகளில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு ஈடுபட்டது.
சரிபார்ப்பு பணி
ஏராளமானவர்கள் நகைக்கடன் பெற்று இருப்பதும், முறைகேடு செய்யும் நோக்கத்தில் பலர் நகைக்கடன் பெற்று இருப்பதும் அரசுக்கு தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து நகைக்கடன் தள்ளுபடி பெறுவதற்கான தகுதி குறித்து வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு மாநிலம் முழுவதும் சரிபார்ப்பு பணி நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து 13 லட்சத்து 47 ஆயிரம் பேர் நகைக்கடன் ரத்து சலுகையை பெற தகுதி உடையவர்கள் என்று தெரியவந்து உள்ளது.
இ.பெரியசாமி பேட்டி
இந்த நிலையில் தேனியில் கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்திய அரசியல் வரலாற்றில் கூட்டுறவுத்துறை மூலம் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு முதல் முறையாக நகைக்கடன் தள்ளுபடி என்ற திட்டத்தை அறிவித்து, கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் வரை வைத்துள்ள ஏழை, எளிய மக்கள், விவசாயிகளின் கடன்களை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தள்ளுபடி செய்துள்ளார்.
கூட்டுறவு கடன் சங்கங்களில் 35 லட்சம் நகைக்கடன் வழங்கப்பட்டுள்ளது. அதில் 13½ லட்சம் பேர் வாங்கிய நகைக் கடன் தள்ளுபடி அளித்து அவர்கள் தங்களின் நகைகளை திரும்ப பெற இருக்கிறார்கள். அதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த கடன் தள்ளுபடி ரசீது அச்சடிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பணம் கேட்டால் நடவடிக்கை
தள்ளுபடி பெறுபவர்கள் எண்ணிக்கை குறைவு என்ற செய்தி வந்திருப்பதாக எனக்கு சொன்னார்கள். கடந்த ஆட்சியில் ஒரு நபர் மட்டும் ரூ.7 கோடி அளவுக்கு 760 நகைக்கடன்கள் பெற்றுள்ளார். அதுபோல், தனி நபர்கள் நூற்றுக்கணக்கான நகைக்கடன்களை பெற்றுள்ளனர்.
இந்த வாரத்தில் இருந்தே தள்ளுபடி செய்யப்பட்டதற்கான ரசீது வழங்கப்படும். கூட்டுறவு சங்க நிர்வாகிகள், நகைக்கடன் தள்ளுபடிக்கு பணம் எதுவும் கேட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
ஏற்கனவே மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு வழங்கிய கடன் ரூ.2 ஆயிரத்து 761 கோடியை தள்ளுபடி செய்துள்ளோம். விவசாயிகளுக்கான பயிர்க்கடன் கிட்டத்தட்ட ரூ.12 ஆயிரத்து 500 கோடி தள்ளுபடி செய்துள்ளோம். நகைக்கடனில் ரூ.6 ஆயிரம் கோடி தள்ளுபடி செய்துள்ளோம். கல்விக்கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கேட்கிறார்கள். அதை முதல்-அமைச்சர் தான் முடிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
யார் யாருக்கு தள்ளுபடி
இந்த நிலையில் யார் யாருக்கு நகைக்கடன் தள்ளுபடி கிடைக்கும் என்ற விவரத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து அனைத்து மண்டல இணை பதிவாளர்களுக்கு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அ.சண்முக சுந்தரம் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
கூட்டுறவு சங்கங்களுக்கு அறிவுரை
தமிழக சட்டசபையில் கடந்த செப்டம்பர் 13-ந் தேதி அவை விதி 110-ன் கீழ் பொதுநகைக்கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பை முதல்-அமைச்சர் வெளியிட்டார். ஒரு குடும்பத்திற்கு 5 பவுனுக்கு உட்பட்ட நகைக்கடன்கள் சில தகுதிகளின் அடிப்படையில் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்தார்.
அதைத்தொடர்ந்து நகைக்கடன் தள்ளுபடி பெறுவதற்கான தகுதிகள் குறித்தும், தகுதியின்மை குறித்தும் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டன. அதன் அடிப்படையில் உத்தேசமாக தகுதி பெறுவோர் மற்றும் பெறாதவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து அயல் மாவட்ட அலுவலர்களைக் கொண்டு ஆய்வு செய்வதற்கான குழு அமைக்கப்பட்டது.
இந்த பணி முடிவடைவதற்குள் மேலும் காலதாமதமாகும் என்பதை கருத்தில் கொண்டும், இதனால் கூட்டுறவு சங்கங்களுக்கு தேவையின்றி நிதி இழப்பு ஏற்படும் என்பதை கருத்தில் கொண்டும் பின்வரும் அறிவுரைகள் வழங்கப்படுகின்றன.
தகுதி பெறாதவர்கள்
இணை பதிவாளர்கள் அலுவலகத்தில் இருந்து பெறப்பட்ட 48 லட்சத்து 84 ஆயிரத்து 726 நகைக்கடன் விவரங்கள் அனைத்தும் கம்ப்யூட்டர் மூலம் பகுப்பாய்வு செய்யப்பட்டு அவற்றில் 35 லட்சத்து 37 ஆயிரத்து 693 கடன்களுக்கு சில நிபந்தனைகளின் அடிப்படையில் நகைக்கடன் தள்ளுபடி பெறாத நேர்வுகள் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி,
* ஏற்கனவே 2021-ம் ஆண்டு பயிர்க்கடன் தள்ளுபடி பெற்றவர்கள் மற்றும் ரேஷன் அட்டையில் இடம் பெற்றுள்ள அவர்களின் குடும்பத்தினர்;
* நகைக்கடன் தொகையை முழுமையாக செலுத்தியவர்கள்;
* 40 கிராமுக்கு மேற்பட்டு நகைக்கடன் பெற்ற நபர் மற்றும் குடும்பத்தினர்;
* கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர்;
* கூட்டுறவு சங்க நிர்வாக குழு உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர்;
* அனைத்து அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர்;
* ரேஷன் அட்டை நம்பர், ஆதார் நம்பரை வழங்காதவர்கள் மற்றும் தவறாக வழங்கியவர்கள்;
* எந்த பொருளும் வேண்டாத ரேஷன் அட்டை வைத்திருப்பவர்:
* ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நகைக்கடன்கள் மூலம் 40 கிராமுக்கு மேலாக கடன் பெற்ற ஏ.ஏ.ஒய். ரேஷன் அட்டைதாரர்கள் ஆவர்.
கள ஆய்வில்....
நிபந்தனைகளுக்கு உட்பட்டு கடன் தள்ளுபடிக்கு தகுதி பெறும் நகைக்கடன்தாரரின் மாவட்ட வாரியான பட்டியல், இணை பதிவாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
தகுதி பெறாத மற்றும் உத்தேச தகுதி பெற்றவர்களின் பட்டியலின்படி கள ஆய்வு மேற்கொள்ளும்போது, தகுதி பெற்றவராக தெரிந்தால் அவர்களை கூடுதலாக சேர்க்க வேண்டும்.
உதாரணமாக ஆதார் எண், ரேஷன் அட்டை எண் ஆகியவற்றை குறைபாடுடன் அளித்திருந்தால் அவர் தகுதி பெறாதவர் பட்டியலில் சேர்க்கப்பட்டு இருப்பார். கள ஆய்வில் அவரது ஆதார் மற்றும் ரேஷன் அட்டை எண் முழுமை பெற்றிருந்தால் அவரும் கடன் தள்ளுபடிக்கு தகுதி பெற்றவர் ஆகிறார்.
பதிவாளர் அலுவலகத்தில் இருந்து இறுதி ஒப்புதல் பெற்ற பிறகே பொது நகைக்கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story