தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை,
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. குறிப்பாக, சென்னையில் இன்று பகல் 1 முதல் கனமழை கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. மேலும் சாலைகளில் மழைநீர் சூழ்ந்துள்ளதால் சென்னை அண்ணாசாலை, கிண்டி, நுங்கம்பாக்கம், கோயம்பேடு உள்ளிட்ட நகரின் பல்வேறு இடங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
கடந்த 7 ஆண்டுகளை விட இந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் தான் அதிகபட்ச மழை பதிவாகி இருப்பதாக வானிலை ஆய்வு மையம் இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று அதிகபட்சமாக எம்.ஆர்.சி. நகரில் 20 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. அதற்கு அடுத்தபடியாக நுங்கம்பாக்கத்தில் 18 செ.மீ, மீனம்பாக்கத்தில் 13 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
இந்த நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் எனவும், தொடர்ந்து மழை நீடிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story