தங்க நகை, வெள்ளிப்பொருட்கள் திருட்டு


தங்க நகை, வெள்ளிப்பொருட்கள் திருட்டு
x
தினத்தந்தி 31 Dec 2021 12:03 AM IST (Updated: 31 Dec 2021 12:03 AM IST)
t-max-icont-min-icon

கோட்டுச்சேரியில் வீட்டின் கதவை உடைத்து தங்க நகை, வெள்ளி பொருட்கள் திருடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கோட்டுச்சேரியில் வீட்டின் கதவை உடைத்து தங்க நகை, வெள்ளி பொருட்கள் திருடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
8 பவுன் நகை திருட்டு
காரைக்காலை அடுத்த கோட்டுச்சேரி பகுதியை சேர்ந்தவர் பிரதீப். சம்பவத்தன்று வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்று விட்டார். பின்னர் நேற்று காலை தனது வீட்டுக்கு அவர் திரும்பினார்.
அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு, அதில் வைத்திருந்த 8 பவுன் நகை, அரை கிலோ வெள்ளிப்பொருட்கள் திருட்டு போயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
மர்மநபர்களுக்கு வலைவீச்சு
இதுகுறித்து கோட்டுச்சேரி போலீஸ் நிலையத்தில் பிரதீப் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவம் நடந்த வீட்டை பார்வையிட்டனர். வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட நபர்கள் கம்பியால் வீட்டின் கதவை உடைத்து தங்க நகை, வெள்ளி பொருட்களை திருடி சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த துணிகர திருட்டில் ஈடுபட்ட மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story